புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை பெய்தது. அதிகபட்சமாக, மழையூரில் 175 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல, கறம்பக்குடியில் 174, ஆயிங்குடி 153, ஆலங்குடி 116, கந்தர்வக்கோட்டை 88, உடையாளிப்பட்டி 85, கீரனூர் 83, மணமேல்குடி 80, அன்னவாசல் 79, பெருங்களூர் 76, திருமயம் 67, கீழாநிலை 64, நாகுடி 63, இலுப்பூர், விராலிமலை 62, அரிமளம் 61, குடுமியான்மலை 57, ஆதனக்கோட்டை 51, அறந்தாங்கி 49, புதுக்கோட்டை 47, பொன்னமராவதி, காரையூர் 42, மீமிசல் 41, ஆவுடையார்கோவில் 36 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதனால் நீர்நிலைகள் ஓரளவுக்கு நிரம்பியுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): ஜெயங்கொண்டம் 110, திருமானூர் 96, செந்துறை 95, அரியலூர் 74.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு(மில்லிமீட்டரில்): பாலவிடுதி 43.50, மைலம்பட்டி 40, பஞ்சப்பட்டி 24.60, அரவக்குறிச்சி 22.60, மாயனூர் 20, கிருஷ்ணராயபுரம் 18.50, கடவூர் 18, குளித்தலை 17.20, கரூர் 13, அணைப்பாளையம் 10, தோகைமலை 8.20, க.பரமத்தி 3.20.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், அரும்பாவூர், பெரிய ஏரி, அரும்பாவூர் சித்தேரி, கீழப்பெரம்பலூர் ஏரி, வடக்கலூர் ஏரி, கீரனூர் ஏரி, பெண்ணகோணம் ஏரி ஆகிய 6 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பாண்டகப்பாடி ஏரி, பேரையூர் ஏரி, நெற்குணம் ஏரி, அகரம்சீகூர் ஏரி, வயலூர் ஏரி ஆகிய 5 ஏரிகள் 90 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன.பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரை பதிவான மழை அளவு(மில்லிமீட்டரில்): பெரம்பலூர் 104, எறையூர், அகரம்சீகூர் 83, லப்பைக்குடிகாடு 75, வேப்பந்தட்டை 73, கிருஷ்ணாபுரம் 64, தழுதாளை 60, செட்டிக்குளம் 59, புதுவேட்டக்குடி 52, வி.களத்தூர் 49, பாடாலூர் 43.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago