கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, நவ.29-ல் கணபதி, லட்சுமி, நவக்ரஹ ஹோமங்கள், தன, கோ பூஜைகள், கிராமசாந்தியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன. நவ.30-ம் தேதி சாந்தி, திசா, மூர்த்தி ஹோமங்கள். டிச.1-ல் பரிவார மூர்த்திகள் யாக சாலை பிரவேசம், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்த மருந்து சாற்றுதல், டிச.2-ல் விநாயகர் வழி பாடு, நேற்று முன்தினம் அஷ்ட பந்தனம், ஸ்வர்ணபந்தனம் சாற் றுதல் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து, கோயிலில் நேற்று அதிகாலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கடங்கள் புறப்பாடு ஆகியன நடைபெற்றன. அதையடுத்து, அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என்ற பல்வேறு அமைப்புகளின் வலியுறுத்திய தாலும் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி யும் சம்ஸ்கிருதத்துடன் தமிழிலும் கும்பா பிஷேகம் நடைபெற்றது. இதில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (டிச.5) முதல் மண்டலாபிஷேம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில்...

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு நளன்குளம் அருகில் உள்ள பொம்மி வெள்ளையம்மா சமேத மதுரை வீரன் கோயிலில் கடந்த 2-ம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து, நேற்று காலையுடன் நான்கு கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர், காலை 9.45 மணியளவில் கோயில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய் யப்பட்டது. இதில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நீராழி மண்டபத்துக்கு...

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளம் பயனற்ற நிலையில் இருந்துவந்தது. இந்நிலையில், மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் குளத்தை மேம்படுத்தும் பணி, அருகில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக குளத்தின் மையப் பகுதியில் நீராழி மண்டபம் அமைக்கப்பட்டது. மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1.50 லட்சம் செலவில் நீராழி மண்டபத் துக்குள் நந்தி ஸ்தாபிக்கப்பட்டு, விமானத்தில் கலசம் பொருத் தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை 10.30 மணியளவில் நீராழி மண்ட பத்தின் கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப் பட்டு, கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. இதில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், கோயில் தனி அதிகாரி வீரசெல்வம் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்