மருத்துவ காப்பீடு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மருத் துவ காப்பீடு திட்ட அட்டைகள் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி யில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு’ திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் ‘ஜன் ஆரோக்யா யோஜனா’ திட்டத்தின் கீழ் தமிழ கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு அடையாள அட்டை கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல் பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டஅலுவலகம் மூலம் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான அடை யாள அட்டைகள் எந்த விதமான கட்டணமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சில கணினி மையங்கள், தனிநபர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டைகளை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுமக்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம். பணம் பெற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்படாத காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படும்.

இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 1800-425-3993 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்