திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத் தில் அனுமதியற்ற மனைப்பிரிவுமற்றும் மனைகளை 15 நாட் களுக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை மூலம், தி.மலை மாவட்டத்தில் கடந்த 20-10-16-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்ய அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக..

நகர ஊரமைப்பு துறை இணையதளம் வழியாக கடந்த 03-11-18-ம் தேதி வரை விண்ணப்பிக்க வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி பெரும்பாலான மனை மற்றும் மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன.

15 நாட்களுக்குள்...

இந்த வாய்ப்பை பயன்படுத்த மனைப்பிரிவு மற்றும் மனையின் உரிமையாளர்கள், அதற்கான காரணம் மற்றும்வரைபடங்களுடன் திருவண்ணா மலை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தை வரும் 15 நாட்களுக்குள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்