நீலகிரியில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்

By செய்திப்பிரிவு

நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா குன்னூரில் நேற்று கூறிய தாவது: புரெவி புயல் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் இல்லை என்றாலும் மழை பெய்துவருகிறது. முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் செய்துவருகிறோம். ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூர் உதவி ஆட்சியர், கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நன்கு பயிற்சி பெற்ற மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேர் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த பத்து நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆபத்தான மரங்கள் அதிகம் உள்ள நிலையில் கனமழை, பலமான காற்று வீசும் போது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்