மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'டெல்லி சலோ’ எனும் முழக்கத்துடன் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கட்சி சார்பற்றவிவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில்கொட்டும் மழையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி, துணைத் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் சந்திரசேகர், மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றவர்கள் பேசும்போது, "விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காதபட்சத்தில், விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை கடந்த காலத்தில் தமிழகத்தில் முன்னின்று நடத்திய சி.நாராயணசாமி நாயுடு, என்.எஸ்.பழனிசாமிஆகியோர் வழியில், விவசாயிகளின் உரிமை மீட்பு இயக்கமாக ‘தமிழக தலைநகரான சென்னையை நோக்கி’ என்ற முழக்கத்துடன் விவசாயிகளை திரட்டி, சென்னையை முற்றுகையிடுவோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago