நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.23.26 ஆக நிர்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில், சிறு விவசாயி களிடம் இருந்து தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை மாதந்தோறும் இந்திய தேயிலை வாரியம்நிர்ணயம் செய்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ. 23.26 வழங்க வேண்டும் என இந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த குறைந்தபட்ச விலையை தொழிற்சாலைகள் முறையாக வழங்குகிறதா என்பதை தேயிலை வளர்ச்சி வாரிய அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago