காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடாதிபதி மறைவைத் தொடர்ந்து, மடத்தின் தக்காராக இந்து சமய அறநிலையத் துறைஉதவி ஆணையர் ரேணுகாதேவியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தொண்டை மண்டல ஆதின மடாதிபதி நேற்று முன்தினம் முக்தி அடைந்தார். இந்நிலையில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள இந்த மடத்தை நித்யானந்தாவின் சீடர்கள் கைப்பற்ற முயலலாம் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. புதிய மடாதிபதி தேர்வுசெய்யப்படும் வரையில் மடத்தின் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தக்காராக உதவி ஆணையர் ரேணுகாதேவியை நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. புதிய மடாதிபதி ஓரிரு மாதங்களில் தேர்வு செய்யப்படுவார் என்று நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago