கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில், ‘பெண் குழந் தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டத்தில் 2019- 20 ம் நிதியாண்டில் 1,177 பெண் குழந்தைகளுக்கு, தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 94 லட்சத்து 25 ஆயிரம் செலவில் வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில், இதுவரை 303 குழந்தைகளுக்கு ரூ.67 லட்சம் செல வினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 945 ஆக உள்ளது. இதனை அடுத்தஇரண்டு ஆண்டுகளுக்குள் 980 ஆகஉயர்த்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கீரப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர்,ஒன்றியக்குழு துணை தலைவர் காஷ்மீர்செல்வி, இணை இயக்குநர் (நலப்பணி கள்) ரமேஷ்பாபு, துணை இயக்குநர்(சுகாதாரம்) செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago