தேசிய கலாச்சார மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளில் காகிதத்திலான தேசியக் கொடிகளை பயன் படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேசியக் கொடி விதிகள் மற்றும் தேசிய நன்மதிப்பு சட்டத்தின் படி, தேசியக் கொடியின் நடைமுறை மரபுகள் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்திடும் வகையில் பொது அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே தேசியக் கொடி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் www.mha.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளும் வகையிலும், தேசிய கொடியின் நடைமுறை மரபுகள் மற்றும் முக்கியத்துவத்தை கடைபிடித்து, தேசிய கலாச்சார மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளில் மக்காத பிளாஸ்டிக் கொடி களை முற்றிலுமாக தவிர்த்து, எளிதில் மக்கும் காகிதத்திலான தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago