கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க, ஆவின் பாலகம் அமைக்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் செய்வதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ. 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மேலும், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஆவின் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை மற்றும் ஆவின் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவிவழங்கும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
எனவே, சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண். 23-ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago