அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தில் 2633 வாகனங்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதால், தகுதியுள்ள பெண் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண் களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-21-ம் ஆண்டுக்கு ஊரகப் பகுதிகளுக்கு 2030, மற்றும் நகர்புற பகுதிகளுக்கு 603 என மொத்தம் 2633 பெண்களுக்கு வாகனம் வாங்க மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம் தொகை, இரண்டில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக பட்சமாக ரூ.31,250 வழங்கப்படும்.

மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயனாளிகள் 18 முதல் 45 வயதுக்குள் உள்ள வராகவும், விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகன ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிட பெண்களுக்கு 21 சதவீதம், மலைவாழ் பெண் களுக்கு ஒரு சதவீதம், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்