விவசாய தொழிலாளர்கள் குடியிருந்து வரும் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அ.பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பி யுள்ள மனு விவரம்: திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் கனமழையினாலும், ஏற்கெனவே கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களாலும் 1990-க்கு பிறகு கட்டிய தொகுப்பு வீடுகள் அனைத்தும் மிகவும் மோசமான அளவில் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தில் வரம்பியம் ஊராட்சி விட்டுக் கட்டியில் 1996-97-ல் கட்டப்பட்ட வீடுகளில் 25 தொகுப்பு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. கஜா புயலின்போது காவிரி டெல்டா மாவட்டத்தில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்து, சட்டப்பேரவையிலும் தமிழக முதல்வர் அறிவித்தார்.
1990-க்கு பிறகு கட்டப்பட்ட இந்திரா குடியிருப்பு வீடுகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து குடியிருக்க தகுதியற்ற வீடுகளாக உள்ளன.
இந்நிலையில், தொகுப்பு வீடுகளில் குடியிருப்பவர்களின் பெயர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இணைக்கப் படவில்லை. இதனால், அவர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக முதல்வர் இது குறித்து உடனடியாக பரிசீலித்து சேதமடைந்த நிலையில் உள்ள அரசு தொகுப்பு வீடுகள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago