ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை விநியோகம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்கும் பணி தொடங் கப்பட்டது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வழங்கும் பணி நேற்று தொடங் கியது.

வேலூர் மாவட்டத்தில் சுமார் 4.23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் முன்னுரிமை அட்டைதாரர்கள் என கணக்கிடப்பட்டுள்ள சுமார் 2 லட்சம் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதிலாக கொண்டைக்கடலை வழங்கப்பட உள்ளது.

முன்னுரிமை இல்லாத அட்டைதாரர்களுக்கு கொண்டைக் கடலைக்கு பதிலாக ஒரு கிலோ துவரம் பருப்பு இந்த மாதம் மட்டும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்