உதவித்தொகை தடையின்றியும் தாமதம் இல்லாமலும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகளை பெற தேவையான அடையாள அட்டைக்காக அலைக்கழிப்பு செய்யாமல் உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்,
இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை தடையின்றி, தாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்லடம் - திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் இருந்த தெற்கு காவல் நிலைய போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக போலீஸார் தெரிவித்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago