புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கே விலை நிர்ணயிக்கும் உரிமை பாஜக மாநில செயலாளர் ராகவன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

விருத்தாசலத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை பாராட்டு விழா கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் ராகவன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் 41 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை புதிய வேளாண் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. 2022-க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அதன் அடிப் படையில் தான் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்ற பட்டிருக் கின்றன.

இதை பிரச்சினையாக்கி, சில எதிர்க்கட்சிக்காரர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை அரசியல் ஆக்காதீர்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைப் பதை தகுந்த நேரத்தில் அறி விப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்