கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உதவித்தொகை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி, தெலுங்கானா ஆகியமாநிலங்களில் மாற்றுத்திறனா ளிகளுக்கு வழங்குவது போல் உதவி தொகையை குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். ஊனமுற்றோருக்கு தனியார் துறை வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசுஉத்தரவாதபடுத்த சிறப்பு சட்டம்இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் வானூர், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், மேல்மலையனூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 536 பேரை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

கடலூர்

கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிலையம் அருகே அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செய லாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்