தேனியில் பேரிடர் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அ.கார்த்திக் தலைமை வகித்தார். ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய 43 இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்படுவோரை மீட்டு தங்க வைக்க 66 தங்குமிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடரால் பாதிக்கப்படும் பொதுமக்கள் 1077 என்ற எண்ணிலோ, 04546- 261093 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago