குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து குப்பாண்டபாளையம் எம்ஜிஆர் நகர் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் எம்ஜிஆர் நகர் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுவட்டாரத்தில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் அனைத்தும் எம்ஜிஆர் நகரில் உள்ள விநாயகர் கோயில் அருகே குவிக்கப்படுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் அப்பகுதியில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், தொடர்ந்து அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் நகர் மக்கள் நேற்று காலை அப்பகுதியின் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை யேற்று மக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago