வேலூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி நிறைவு விழா கூடுதல் டிஜிபிக்கள் பங்கேற்று பாராட்டு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்காக 5 மாதங்கள் அடிப்படை பயிற்சி நிறைவு செய்த 820 பேருக்கான பயிற்சி நிறைவு விழாவில் கூடுதல் டிஜிபிக்கள் அபாஷ்குமார், அபய்குமார் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சிப் பள்ளியில் திண்டுக்கல், விருதுநகர், மதுரை,சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 284 பெண்கள் கடந்த ஜூன் மாதம் முதல் 2-ம் நிலை காவலர் பணிக்கான அடிப்படை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா கோட்டை மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபாஷ்குமார் பங்கேற்று பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், அவர் பேசும்போது, ‘‘அனைத்து மகளிர் காவல் நிலைய செயல்பாடுகளில் நாட் டுக்கே தமிழகம் முன்னுதாரண மாக உள்ளது. காவலர்பணிக்கு வந்துள்ள நீங்கள் நாட் டுக்கு சேவை செய்து நன் மதிப்பை பெற வேண்டும்’’ என்றார்.

இவர்களில், 150 பேர் வேலூர்மாவட்ட காவல் நிலையங்களிலும், 134 பேர் தி.மலை மாவட்ட காவல் நிலையங்களிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு பயிற்சி மேற்கொள்ள உள் ளனர். நிகழ்ச்சியில், வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேவூர் பட்டாலியன்

காட்பாடி அடுத்த சேவூரில் செயல்படும் 15-வது பட்டாலியனில் சிறப்பு அதிரடிப்படைக்கு தேர்வா கிய 338 பேரும், கூடுதல் காவலர் பயிற்சி பள்ளியில் 198 பேர் என மொத்தம் 536 ஆண் காவ லர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சேவூர் பட்டாலியன் மைதானத் தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுகூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் பங்கேற்றார். பின்னர், பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் மற்றும் பயிற்சி அளித்த அதிகாரி களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

விழாவில், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, சேவூர் பட்டா லியன் கமாண்டன்ட் செந்தில்குமார், காவலர் பயிற்சிப் பள்ளி யின் துணை முதல்வர் சார்லஸ், சட்ட போதகர்கள் கவிதா, பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்