வேலூர், தி.மலையில் மாற்றுத்திறனாளிகள் மறியல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

By செய்திப்பிரிவு

மூன்று அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட் டனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் வீரபாண்டியன், மாவட்ட துணை தலைவர் சங்கரி, மாவட்ட துணை செய லாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். அதிக பாதிப்புள்ள மாற் றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை வழங்கவேண்டும். தனியார் துறை களில் மாற்றுத்திறனாளி களுக்கு 5 சதவீதம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கனக்காண மாற் றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர். சாலை மறியல் நடத்த அனுமதியில்லை என காவல் துறையினர் கூறி யதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளி கள் காத்திருப்புப் போராட் டத்தை தொடர்ந்தனர்.

இதேபோல், திருப்பத் தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்துநிலையம் அருகே மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட துணை செய லாளர் சந்திரசேகர், வட்ட செயலாளர் ராஜதுரை, வட்ட பொருளாளர் அருள் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கை களை வலியுறுத்தி மறி யலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

செங்கத்தில் மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலை மையிலும், போளூரில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையிலும், தி.மலையில் மாவட்டப் பொருளாளர் சத்யா தலைமையிலும், கீழ்பென் னாத்தூரில் மாவட்ட குழு உறுப்பினர் பாக்கியராஜ் தலைமையிலும், தண்ட ராம்பட்டு, பிரம்மதேசம் உட்பட 7 வட்டங்களில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்