திருப்பூர் மத்திய காவல் எல்லைக்கு உட்பட்ட பெரியாண்டி பாளையம் பகுதியில் நேற்று பிற்பகல் சிறுமி அழுதுகொண்டிருந்தார். அவரது அருகே பெண் ஒருவர் நின்றிருந்தார். அருகே உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீஸார் சந்தேகமடைந்து, இருவரிடமும் விசாரணை நடத்தினர். அந்த பெண், திருப்பூர் கொங்குபிரதான சாலையை சேர்ந்த கண்மணி (35) என்பதும், அழுது கொண்டிருந்தது அவரது 7 வயது பெண் குழந்தை என்பதும், சாலையில் பிச்சை எடுக்க வற்புறுத்தியதால் சிறுமி மறுப்பு தெரிவித்து அழுததும் தெரியவந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சைல்டுலைன் அமைப்பினர் சென்று, குழந்தையை மீட்டு அனுப்பர்பாளையத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பினர் கூறும்போது, "அப்பெண்ணின் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிகிறது. சிறுமியிடம் கேட்டபோது, அந்த பெண்ணை தனது தாயார்என்றே தெரிவித்தார். இதனால், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பெண்ணை உரிய ஆவணங்களுடன் நாளை (இன்று)மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராக அறிவுறுத்தப் பட்டுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago