மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழையின் காரணமாக, திருப்பூரில் இருந்து பின்னலாடை சரக்குகளை அனுப்பிவைக்க முடியாத நிலை உள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் லாரி புக்கிங் உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, "திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தினமும் பின்னலாடைகள் பண்டல்கள் மூலமாக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பண்டல்களிலும் லட்சக்கணக்கில் பின்னலாடைகள் இருக்கும். இதனை புக்கிங் செய்து லாரிகள் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு, ஆடை தயாரிப்பாளர்கள் அனுப்பி வைப்பார்கள். தற்போது, வெளி மாநிலங்களில் மழை பெய்வதால், குறிப்பிட்ட சிலமாநிலங்களுக்கு ஆடைகள்கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால், புக்கிங்அலுவலகத்தில் தேக்கமடைந்துள்ள ஆடைகளின் மதிப்பும் பல கோடி இருக்கும். மழை பாதிப்பு முடிவடைந்த பின்னரே அனுப்பிவைக்கும்படி ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள் ளனர்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago