மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டம் கடலூர் மாவட்டத்தில் 112 பேர் கைது

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள், மின்சார ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்றுகடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட் டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஆறு முகம் தலைமை தாங்கினார். தலைமை தபால் நிலையத்தின் உள்ளே நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போலீஸார், தங்கள் தரப்பில் 10 பேர் லேசான காயமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 60 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல்,நெய்வேலி மெயின் பஜார் காமராஜ் சிலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று 2 வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், திண்டி வனம், விக்கிரவாண்டி, கஞ்ச னூர், திருவெண்ணை நல்லூர் ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்