கள்ளக்குறிச்சி மயானத்தில் குவிந்த குப்பைகளை அகற்றிய திமுக எம்எல்ஏ

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட் டில் கோமுகி ஆற்றோரம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் மயானம் உள்ளது. நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மயானத்திற்கு அருகே கொட்டப்பட்டு வந்தது. இந்த மயானத்தை ஒட்டி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் மக்கும்,மக்காத குப்பையை தரம் பிரிக்கும் உரப்பூங்கா அமைக்கப்பட் டுள்ளது.

இந்த உரப் பூங்காவிற்காக, குப்பைகள் கொட்டப்பட்டு மயா னத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வந்தது. அப் பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக் கவில்லை.

இப்பிரச்சினை தொடர்பாக ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திக் கேயனும் கள்ளக்குறிச்சி ஆட்சியர்கிரண்குராலாவிடமும் மனு அளித் திருந்தார்.

இருப்பினும் எவ்வித நடவ டிக்கை எடுக்கப்படாதததால், நேற்று தனது ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ அங்கு சென்றார்.

அக்குழுவினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு மயானத்தின் வெளிப்பகுதியில் பாதையில் இருந்த குப்பைகளை லாரி மூலம் அகற்றி, அப்பகுதியில் பாதையை ஏற்படுத்தி கொடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்