பிற்படுத்தப்பட்டோருக்கு 40 சதவீதம் இடஒதுக்கீடு கொமதேக கோரிக்கை

By செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்ந்து கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதியினர் மட்டும் 55 சதவீதம் பேர் இருக்கின்றனர். பிற்படுத்தப் பட்டோர் பிரிவுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து தான், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடுகளால், பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு, 26.5 சதவீதமாக குறைந்துள்ளது.

தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமகவினர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், 55 சதவீதம் மக்களுக்கான 26.5 சதவீதமாக இருக்கின்ற இட ஒதுக்கீட்டை, 40 சதவீதமாக மாற்றினால்தான், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகளைச் சேர்ந்த, மாணவ மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் ஓரளவுக்காவது வாய்ப்பு கிடைக்கும். எனவே, அரசு பிற்படுத்தப் பட்டோர் பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்