மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில்விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காலை 10.30 மணியளவில்திரண்டு, முற்றுகையிடுவதற்காக தலைமை அஞ்சல் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து அலுவலகம் முன்புள்ள தூத்துக்குடி- திருச்செந்தூர்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மாநகரச் செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ராகவன், புறநகர் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை தென்பாகம் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதுபோராட்டக்காரர்கள் வைத்திருந்தபேனர் கிழிந்தததால் போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளுஏற்பட்டது. டிஎஸ்பி கணேஷ் சம்பவஇடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவுஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற 6 பெண்கள் உட்பட 49பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கே.சீனிவாசன் தலைமை வகித்தார். பயணியர் விடுதி முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு இளையரசனேந்தல் விலக்கு பகுதியில்சாலையில் அமர்ந்து மறியலில்ஈடுபட்டனர். 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி
தென்காசி எல்ஐசி அலுவலகம் அருகில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தென்காசி தாலுகா தலைவர் லெனின்குமார் தலைமை வகித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago