மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி மற்றும் கால்நடைகளுக்கு கொட்டகை அமைக்கும் பணியை மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கக்கோரி பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தர்ணா நடைபெற்றது.
தி.மலை மாவட்டம் பெரண மல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் கால்நடைகளுக்கு கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடைபெறுகிறது. பணியை செய் வதற்கான திட்ட அறிக்கையை ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அனுப்பப்படுகிறது. இதற்கு கண்ட னம் தெரிவித்து, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தர்ணா நடைபெற்றது. அப்போது, "100 நாள் திட்டப் பணி மற்றும் கொட்டகை அமைக்கும் பணிகள்ஊராட்சி தலைவர்கள் மேற்பார்வை யில் நடைபெற வேண்டும்" என வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின் னர் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago