கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை நாளை (டிச.2) ஒத்திவைப்பதாக நீதிபதி அருணாச்சலம் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. விசாரணைக்கு 8 பேர் ஆஜராகினர். ஜம்சீர் அலி மற்றும் சந்தோஷ்சமி ஆஜராகவில்லை.
விசாரணையின்போது, கோவை மத்திய சிறையில் அடிப்படை வசதிகளை செய்துதர வார்டன் சிவராஜ், தன்னிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக நீதிபதியிடம் சயான் புகார் தெரிவித்தார். வழக்கை நாளை (டிச.2) ஒத்தி வைத்து பொறுப்பு நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார். சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago