பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில், விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோரும் முறைகேடாக சேர்ந்து உதவித்தொகையை பெற்றுள்ளனர். இதுதொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே வடக்கு தாங்கலைச் சேர்ந்த நாகப்பன்(38), ஜி.அரியூரைச் சேர்ந்த வேல்முருகன்(35) ஆகியஇருவரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இருவரும், தங்களின் கம்ப்யூட்டர் மையம் மூலம் 3 ஆயிரம் பேரை போலியாக சேர்த்தது தெரியவந்தது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago