அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு சுவர் விளம்பர பணிகளை, ஓவியர் கூட்டுறவு சங்கத் திற்கு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருபாகரன் தலைமையில் ஓவியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியர்கள் உள்ளனர். டிஜிட்டல் பிரிண்டிங் மெஷின் வரவால் ஓவியர் சார்ந்த தொழில் அனைத்தும் டிஜிட்டல் பிரிண்டிங் தொழில் ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் 10 ஆண்டுகளாக ஓவியத்தொழில் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசோடு இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கரோனா விழிப்புணர்வு ஓவியங்களை சாலைகளில் வரைந்துள்ளோம்.
அரசு விளம்பரங்களை ஓவியர்கள் அல்லாத தனி நபர்கள் மொத்தமாக ஒப்பந்தம் செய்து, மிகக் குறைந்த விலைக்கு ஓவியர்களை வேலை செய்யச் சொல்கின்றனர். எனவே, அரசு சார்ந்த வேலைகளை தமிழ்நாடு ஓவியர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ஒதுக்கி, நேரடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago