தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊர்க் காவல் படைக்கு தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.
தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங் களில் ஊர்க்காவல் படைகளில் 43 ஆண்கள், 7 பெண்கள் பணியிடங்கள் காலியாக இருந் தன. இதற்கான ஆட்கள் தேர்வு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நவ.28-ம் தேதி நடைபெற்றது. இதில், உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு நவ.29 -ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற 43 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 50 பேருக்கு மாவட்ட காவல் அலு வலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
முன்னதாக, செய்தியாளர்களி டம் தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறியது: காலியாக இருந்த 50 பணியிடங்களுக்கு 2,800 பேர் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் 1,800-க்கும் அதிகமானோர் தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் சம்பத் பாலன், ஊர்க்காவல் படை சரகத் தலைவர் எஸ்.செந்தில்குமார், ஊர்க்காவல் படைத் தளபதி ஆர்.சுரேஷ், உதவி மண்டலத் தளபதி எஸ்.மங்களேஷ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago