விழுப்புரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பேரறிவாளன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து அவரது தாயார் அற்புதம்மாள் மனு தாக்கல் செய்ததால், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித் தது. கடந்த அக்டோபர் மாதம் 9 ம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் பரோலை நீட்டிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஒருவாரத்துக்கு பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மாலை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் பேரறிவாளன் தன் தாயார் அற்புதம் மாளுடன் வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத் துவமனை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. அவர் மீண்டும் நேற்று மாலை ஜோலார்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago