நீர்வரத்துக் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் ஒளி விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் நூதனப் போராட்டம் தி.மலை மாவட்டம் செய்யாறு பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் புரு ஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறையை உரு வாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தியது. ஆனால், பொதுப்பணித் துறை, வருவாய் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறது. இதனால், அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. அதன் எதிரொலியாக, மழை காலத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஏற்படுகிறது. எனவே உயர்நீதி மன்ற கிளையின் அறிவுரைப்படி, தனித்துறையை ஏற்படுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம். செய்யாறு அடுத்த தண்டரை அணைக் கட்டின் இடதுபுறக் கால்வாயை தூர் வாரி, தூசி மற்றும் மாமண்டூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களை தூர் வாரி இருந்தால், தற்போது பெய்கிற மழை நீரை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால், நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாராததால், விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்க மிட்டனர். பின்னர், பொதுப் பணித் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago