மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தி.மலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 155 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ளமூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியு றுத்தி புதுடில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தி.மலை மாவட்டத்தில் முற்றுகை மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. தி.மலை, போளூர், செங்கம், ஆரணி உட்பட 6 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கள், “விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் உள்ள தாகவும், இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுடில்லியில் நடை பெறும் விவசாயிகளின் தொடர் போராட்டம் வெற்றி பெற வேண்டும்” என கூறி முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 155 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago