ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பால் சுமார் 5,490 ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பால் வட தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், முக்கியமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னையாற்றில் அளவுக்கு அதிகமான வெள்ளம் கரைபுரண்டோடியது. பாலாறு அணைக்கட்டை கடந்து ஒரே நாளில் 40 ஆயிரம் கன அடி வீதம் வெள்ளநீர் வெளியேறியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் சுமார் 290-க்கும் அதிகமான குடிசைகள் சேதமடைந்த நிலையில், பயிர் சேதம் மட்டும் சுமார் 5,490 ஏக்கர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago