'நிவர்' புயலின் விளைவாக விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய நிலங் களில் மழைநீர் தேக்கியுள்ளது. விவசாயிகள் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இதர குழு நபர்களுடன் இணைந்து, வயலில் உள்ள வடிகால் வாயிலில் ஏதேனும் தடைகள் இருந்தால் அதனைஅகற்ற வேண்டும். அருகிலுள்ள குளம்,குட்டை போன்ற நீர் நிலைகளுக்கு வெள்ளநீர் எளி தாக சென்றடைய வழிவகை செய்யவேண்டும்.
இதனால் பயிர் சேதத்தினை தவிர்க்க முடியும். கிராமங்களில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் ஆதாரமும் உறுதி செய்யப்படும்.எதிர்வரும் கோடைகாலங்களில் விவசாயிகளுக்கு இது பேருதவியாக அமையும்.
வெள்ள நேரங்களில் வேளாண் நிலங்களில் சத்து இழப்பு ஏற்படும்.இதனை சரிசெய்ய நெற்பயிராக இருப்பினும், வயலில் இருந்து வெள்ளநீரை வடித்து, பின் இலை வழி உரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா கரைசல் மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட்டு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக் கலாம் .
நெற்பயிரில் இலை உறை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனை கட்டுப்படுத்த புரப்பிகோனசோல் 200 மில்லி அல்லது கார்பன்டசிம் 200 கிராம், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
இலை வழி உரமிட வேண்டும்
உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகையாகப் பயிராக இருப்பின் 2 சதவீதம் டிஏபி,இலை வழியாக உரமாக கொடுக் கலாம்.தென்னை சாகுபடி செய்யும்விவசாயிகள் தென்னங்குருத் துப்பகுதியை நன்கு பராமரிக்க வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் குருத்தழுகல் நோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதனைக் கட்டுப் படுத்துவதற்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசல் 0.3 சதவீதம் அல்லது போர்டோ கலவை 1 சதவீதம் அல்லது போர்டோ பசை 10 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.
மாட்டுக் கொட்டகைகள் நீர் புகாதவாறு இருக்க வேண்டும். பக்கச் சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் கோணிப்பைகள் தொங்க விட்டு மழைச்சாரல் உள்ளே புகாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ் சுகளின் இருப்பிடத்தில் மஞ்சள் பல்பினை கொண்டு கதகதப்பாக வைக்க வேண்டும். மின்சார வசதி இல்லாத இடங்களில் காய்ந்த வைக்கோல் கொண்டு கதகதப்பான சூழ்நிலை உருவாக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் உணவில் மாவுச் சத்து அதிகம் சேர்ப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago