விழுப்புரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

By செய்திப்பிரிவு

'நிவர்' புயல் ஏற்படுத்திய பாதிப்புகுறித்து விழுப்புரம் மாவட்ட நிர் வாகம் சார்பில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில், புயல்பாதிப்பால், விழுப்புரம் மாவட் டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,024 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,148 ஆடு, மாடு மற்றும் கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 532 மின் கம்பங்கள், 54 மின் மாற்றிகள், 33 கிலோ மீட்டர் நீள மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன.

4,008 ஹெக்டேரில் பயிரிடப் பட்டிருந்த நெற்பயிர்கள், 3,478 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, 448 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை, 67 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, 650.05 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த தோட்டக் கலைப் பயிர்கள் என ஆரம்பக் கட்ட பயிர்கள் சேத விபரம் தெரியவந்துள்ளது.

காற்றில் விழுந்த 520 மரங்கள் அகற்றப்பட்டன. மின்சாரம்துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து பகுதிகளுக் கும் மின் விநியோகம் வழங் கப்பட்டுள்ளது.

587 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரத்து 576 பேர் அவரவர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரத்து 576 பேர் அவரவர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்