ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிர்களைத் தாக்கும் இலைச் சுருட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேளாண் அதிகாரியோ சனை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணபாலன் தெரிவித்துள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,22,000 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே இலை சுருட்டுப்புழு தென்படுவதால், விவசாயிகள் சில ஆலோசனைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். அதிக தழைச்சத்து இடுவதன் மூலம் பூச்சிகளை பயிர் கவர்ந்திழுக்கிறது.எனவே உரப் பரிந்துரைப்படி ஏக்கருக்கு 1 மூட்டையூரியாவை தூர்கட்டும் பருவத்திலும், பூ பிடிக்கும் பருவத்திலும் இரண்டாகப் பிரித்து கொடுக்க வேண்டும். இலைச் சுருட்டுப் புழுக்கள் இலையின் பச்சையத்தைஅரித்து உண்பதால், இலைகள் வெண்மையாகத் தென்படும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை பின்பற்றி இலைச் சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தலாம். தாய் அந்துப் பூச்சிகளைகவர்ந்து அழித்திட விளக்குப் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு கரைசலை 45-வது நாளில் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 400 மில்லி அசாடிராக்டின் அல்லது 60 மிலி குளோரன்ட்ரனிலோப்ரோல் 18.5% எஸ்சி அல்லது 400 கிராம் கார்டார்ப் ஹைட்ரோ குளோரைடு 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். அல்லது 60 லிட்டர் நீரில் விசைத் தெளிப்பான் கொண்டு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago