தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மஞ்சளாறு நீர்த்தேக் கத்தில் இருந்து பாசனத்துக்காக ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்துவிட்டார்.
பின்பு அவர் கூறியதாவது: தேனி, திண்டுக்கல் மாவட்டங் களில் உள்ள 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதமும், 1,873 ஏக்கர் புதிய ஆயக்கட்டுக்கு விநாடிக்கு 40 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 107 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கணவாய்பட்டி, வத்தலகுண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் உள்ளிட்ட பகுதி களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
உதவி ஆட்சியர் டி.சிநேகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தாக்ரேசுபம், பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் கார்த்திகேயன், வட்டாட்சியர் ரத்தினமாலா, முன்னாள் எம்.பி., எஸ்பிஎம்.சையதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago