புயல் காற்றுக்கு ஊத்தங்கரையில் கரும்புத் தோட்டம் சேதம் இழப்பீடு வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

‘நிவர்’ புயலின் போது, ஊத்தங் கரை பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சந்தகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாபு (46). இவர் தனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு நடவு செய்திருந்தார். தற்போது 10 அடிக்கு மேலாக கரும்புகள் வளர்ந்துள்ளன. இந்நிலையில் ‘நிவர்’ புயலின் போது, ஊத்தங்கரை பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது, கரும்புகள் முறிந்து சாய்ந்து சேதமடைந்தன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், கரும்பு பயிர் சேதமடைந்துள் ளதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி பாபு வேதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது,‘‘பொங்கல் கரும்பு 9 மாத பயிர். மார்கழி மாதத்தில் அறுவடை செய்யும் நோக்கில் சித்திரை மாதம் கரும்பு கனு நடவு செய்யப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்தோம். அதற்குள் காற்றுக்கு உடைந்து சேதமாகி விட்டது. வேளாண்மைத்துறை அலு வலர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்