கிருஷ்ணகிரி அணையில் இருந்து 760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘நிவர்’ புயலின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 760 கனஅடி என்ற அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் மொத்த கொள்ளள வான 52 அடியில் தற்போது 50.10 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு காரணமாக அணையில் இருந்து 760 கன அடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் நிலைக்கு ஏற்ப, ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago