திருவாரூர் நகரத்தில் சாலையில் புதைசாக் கடையின் கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவாரூர் நகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட ஐநூற்று பிள்ளையார் கோயில் தெருவில் புதைசாக்கடைக்கான செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களும் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கார்த்தி கூறியபோது, “கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதைசாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. நகராட்சியில் தகவல் கொடுத்தால், அடைப்பு எடுக்கும் இயந்திரம் கொண்டு வந்து, புதைசாக்கடையின் நீரோட்டத்தை சரிசெய்துவிட்டுச் செல்கின்றனர். பின்னர், ஓரிரு மணி நேரத்திலேயே மீண்டும் இதே நிலை ஏற்படுகிறது. எனவே, உடனடியாக இப்பகுதி முழுவதும் சீரமைப்புப் பணியை மேற்கொண்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து நகராட்சியில் விசாரித்தபோது, “ஐநூற்று பிள்ளையார் கோயில் தெருவில் புதைசாக்கடை வழிந்தோடும் தகவல் வந்தவுடனேயே நகராட்சி அடைப்பு எடுக்கும் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டு, சீரமைக் கப்பட்டது. நிலைமை இன்னும் சீரடையவில்லை என பொதுமக்கள் தெரிவிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago