காரைக்கால் மீனவர்கள் கடலுக் குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது:
‘நிவர்’ புயலை அடுத்தும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிரமடைந்து தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி வரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த அறிவிப்பை மீறி, மீன்பிடிக்க செல்லும் படகு உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக் கூடாதென மீன்வளத்துறை உதவி இயக்குநர் மு.குமரேசன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago