கோடந்தூரில் விசாரணையை தொடங்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்

கரூர் மாவட்டம் கோடந்தூரில் ராஜலிங்க மூர்த்தி சுவாமி கோயிலின் கருவறையில் இருந்த ஐம்பொன்னாலான இரண்டரை அடி உயர முருகன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் தென்னிலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு கரோனா ஊரடங்குக்கு முன்பு திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, கரோனா ஊரடங்கு காரணமாக விசாரணை தொடங்கப்படாத நிலையில், தற்போது சிலை திருட்டு தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE