அரியலூர் அருகேயுள்ள தாமரைக் குளம் கிராமத்தில், தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தலைமை வகித்து பேசியபோது, “நுண்ணுயிர் உரங்கள் மற்றும் பேவெரியா பேசியானா டிரைக்கோடெர்மா விரிடி போன்ற இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
வேளாண் அலுவலர் சவிதா பேசியபோது, ஊடுபயிர், வரப்பு பயிர் மற்றும் வயல் ஓரப் பயிர் சாகுபடி முறையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
முடிவில், உதவி அலுவலர் தேவி நன்றி கூறினார். கூட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago