கரூர் அருகேயுள்ள வெங்கக் கல்பட்டியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் 65 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய ஒரு குளம் உள்ளது. இந்தக் குளம் தூர்வாரப்படாததாலும், நீர்வழித்தடங்கள் தூர்ந்து போனதாலும் பல ஆண்டுகளாக இக்குளத்துக்கு நீர்வரத்து இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து, மாநில போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முயற்சி யால், 2 தனியார் அமைப்புகள் தலா ரூ.2 லட்சம் வழங்கின.
இந்தத் தொகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைக் கப்பட்டு, குளம் தூர் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், குளத்துக்கான நீர்வழித்தடங்களை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வெங்கக் கல்பட்டியில் உள்ள குளத்துக்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago