விபத்துகளை தடுப்பது குறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாழையூத்து ரயில்வே கேட் அருகே நடந்த நிகழ்ச்சியில், தண்டவாள பாதையை கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் கடப்பதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், செல்போனில் பேசியபடியே தண்டவாள பாதையை கடக்கும்போது ஏற்படும் பாதிப்பு குறித்தும், குழந்தைகள் விளையாட்டாக தண்டவாளப் பாதையில் சிறு சிறு ஜல்லி கற்களை வைப்பதால் ஏற்படும் விபத்து பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநெல்வேலி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago