மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

‘நிவர்’ புயல் கனமழை காரணமாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் குடிநீர் தரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

கடந்த 25-ம் தேதி ‘நிவர்’ புயல் கரையை கடந்த போது வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. வேலூர், காட்பாடி உள்ளிட்ட மாநகராட்சிப்பகுதிகளில் கனமழையால் கால்வாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல தெருக்கள் சேறும், சகதியுமாக உள்ளன.இதனால், பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைத்தொடர்ந்து மீட்புப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துரிதப்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின் மோட்டார்களை கொண்டு மழைநீரை வெளியேற்றுவது, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்வது, கனமழையால் சேறும், சகதியுமாக மாறிய சாலைகளை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

அதேபோல, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குடிநீரில் குளோரின் அளவு சரியாக இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதால் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா? என்பதை நேற்று ஆய்வு செய்தனர்.

குடிநீர் தொட்டி, தெருக்குழாய் களில் வரும் தண்ணீரை பிடித்து அதில் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா ? என்பதை ஆய்வு செய்தனர். மேலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறதா? என்பதையும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, வேலூர் கன்சால்பேட்டை, முள்ளிப்பாளை யம், திடீர் நகர் உள்ளிட்ட பகுதி களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த 26-ம் தேதி மழைவெள்ளம் சூழ்ந்தது. தற்போது, அந்த மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதைத்தொடர்ந்து, மழை வெள்ளதால் சேறும், சகதியு மாக இருந்த பகுதிகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளர் கள் நேற்று சீரமைத்து, அங்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்