ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா உறுதி

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,189-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,177-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,231-ஆக உயர்ந்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,597 ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு மேலும் 9 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 18,595-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்